இமாம் அபூ ஹனீஃபா, அவரின் வாழ்வு, அபிப்பிராயங்கள், ஃபிக்ஹு ஆகியவற்றைக் குறித்த ஆய்வே இந்நூல். அவரின் ஆளுமை, மனோநிலை, சிந்தனை குறித்து புரிந்துகொள்ள ஏதுவாக முதலில் அவரின் வாழ்வைப் பற்றி அலசுகிறது இந்நூல். இதன் மூலம், இந்த இமாமின் சிறப்புத் திறன்கள் மற்றும் பண்புநலன்களை வெளிப்படுத்தும் அசலானதொரு சித்திரத்தை வாசகருக்கு வழங்க முடிந்திருக்கிறது. அடுத்து சமயக் கோட்பாடு, ஃபத்வாக்கள், ஒப்புநோக்கு (கியாஸ்) ஆகியன குறித்த அவரது கண்ணோட்டங்களை ஆய்வு செய்கிறது.
இமாம் அபூ ஹனீஃபாவின் உண்மைச் சித்திரத்தை, அதன் அனைத்து ஒளிச்சாயல்கள் மற்றும் கீற்றுகளுடன் வெளிப்படுத்திட இந்த நூலினால் இயன்றுள்ளது. அதனைக் கண்டறிந்திடும் நிகழ்வு முறையில், அவர் வாழ்ந்த காலம் குறித்து வெளிச்சமூட்டியுள்ளது. பெரிதும் குறிப்பிடத்தக்க மற்றும் சமகால சமய உட்பிரிவுகளைப் பற்றிய சில தகவல்களையும் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவினர்களுடன் அவர் வாக்குவாதமும் விவாதமும் செய்துள்ளார் என்பதும், அவற்றின் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துகள் அக்காலத்தில் பெரிதும் கலந்துரையாடப்பட்டன என்பதும் திண்ணம். அவற்றைக் குறிப்பிடுவது, அந்த யுகத்தின் மனப்பாங்கு மற்றும் அதில் செல்வாக்குப் பெற்றிருந்த சிந்தனைக் கூறுகளை தெளிவுபடுத்த உதவியிருக்கிறது.
Be the first to rate this book.