லட்சுமி எனும் பயணி

லட்சுமி எனும் பயணி

மகளிர் ஆணையம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் மனைவியுமான இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” என்னும் இந்நூல், “உழைப்பு , பராமரிப்பு, உறவுப் பிணைப்பு – இவற்றை ஆதாரமாகக்கொண்டு விரியும் வாழ்க்கைப் பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவாகும்;” என இந்நூலின் முன்னுரையில் வ.கீதா குறிப்பிட்டிருக்கிறார். இதை வழிமொழிகிறோமோ இல்லையோ அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒரு அற்புதமான நூல் என்று உறுதியாகக் கூறலாம். 1970 களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை இந்நூலில் விவரித்து எழுதியுள்ளார். பெண்ணியப்பதிப்பகமாக உருவாகியுள்ள மைத்திரி பதிப்பகம் தனது முதல் நூலாக இந்நூலை, வெளியிட்டது. தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்து இதுவரை பல நூல்கள் வெளிவந்துள்ள நிலையில், கடைநிலை ஊழியராக இயக்கப் பணியாற்றிய பெண்களின் வாழ்க்கையை இயல்பாக – இலக்கிய வடிவத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பது இந்நூல்தான். தனது படைப்பில் இலட்சுமி அம்மாவின் தன் வாழ்க்கையை மட்டும் படம்பிடித்துக் காட்டுவதல்லாமல், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வரலாறு, தோழர் பெ. மணியரசன் – கி. வெங்கட்ராமன் ஆகியோரது எளிமையான வாழ்க்கை, போராட்டம், நட்பு எனப் பலவற்றையும் அழகாகப் பதிவு செய்துள்ளதுள்ளார்.

வன்முறை, அடக்குமுறை அவற்றை எதிர்த்து துணிந்து நிற்பது, அன்றாட வாழ்க்கையை அவற்றின் ஊடாய் கட்டமைப்பது என நாள்தோறும் பெண்கள் கிராமங்களில், சிறு நகரங்களிலும், பெரு நகர குடிசைப்பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் நிகழ்த்தி வரும் வாழ்க்கைப் போராட்டம் பெண்ணியத்தின் மிக முக்கியமான களம். பெண்களின் வாழ்க்கை இன்னமும் பெரிய அளவில் ஆண்பார்வையினூடாக பாலியல் சார்ந்து கட்டமைக்கப்படுவதும் அதை எதிர்கொள்ளும் பெண்கள் அதற்குச் சவால் விடுத்து பல்வேறு தளங்களிலும் போராட்ட வாழ்வை நடத்தி வருவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான பெண்களின் வாழ்வனுபவங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை இலக்கியங்களில் இடம்பெறச் செய்து வாசிப்பினூடே அவர்களுக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கிக்கொடுக்கும் பதிப்பகங்களின் நோக்கமும் படைப்பாளர்களி;ன் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது. இலட்சுமி அம்மா எழுதிய ‘லட்சுமி என்னும் பயணி’ என்ற நூல் இவ்வாறான நோக்கங்களைக் கொண்ட மைத்ரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு தன்வரலாற்று நூலாகும்.

தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது முதல், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது, அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க.மார் (சி.பி.ஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து அதுவும் நிலைக்காமல் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கியது வரையிலான பல்வேறு செய்திகளை இந்நூலில் எழுதியுள்ளார்.

1975 முதல் 2000 வரையிலான காலப் பகுதியில் தஞ்சையிலும் அதைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களிலும் நிலவிய சூழல் பற்றி நூலில் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது. தன்னிடம் அன்புகாட்டாத பெற்றோர், சொந்த வீட்டில் தான் பட்ட இன்னல்கள், தன் வாழ்வில் அனுபவித்த வறுமை எனத் தன் இளம் பருவக் காலத்தை அவர் விவரித்திருக்கும் விதம் சிறப்பானது. இளம் பெண்ணாக, தாயாக, குடும்பத் தலைவியாக ஒரு பெண் தன் வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள் பலப் புதினங்களை எழுதும் அளவுக்கு அனுபவங்களைத் தந்திருக்கின்றன. அவ்வப்போது காலத்தை எதிர்த்துப் போராடியவராகவும், பெரும்பாலும் காலத்தால் இழுத்துச் செல்லப்படுபவராகவும் இலட்சுமி அம்மாள் தன் வாழ்வினூடே பயணம் செய்துள்ளார். சமூகத்தின் மையத்தில் கலக்காமல் செயல்படும் இடதுசாரிச் செயல்பாட்டாளர்களிடம்கூட பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை தனது நூலில் மேலோட்டமாக பதிவுசெய்துள்ளார் லட்சுமி.

இந்நூலில் பேசப்படும் தலைமறைவு வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகளால் ஏவப்படும் வன்முறைச் செய்திகள் ஆகியவை வேறெந்த தன்வரலாற்று நூல்களிலும் காணக்கிடைக்காத அரிய செய்தியெனலாம். ‘பெ.ம விகடன் இதழ் வாங்கி அதில் திருமாவேலன், கவின்மலர் கட்டுரைகளைப் படிக்கும்போது, தமிழர் இனம் வென்றுவிடும் எனத் தோன்றும்’ என்பார் இலட்சுமி அம்மா. இவரது நம்பிக்கை வாசிப்பினூடே பயணப்படுகையில் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இலட்சுமி அம்மாவின் பட்டறிவுகளை எங்கெங்கு விரிவாகப் பதிவுசெய்ய வைக்கலாம் என்பதைக் கண்டறிந்து அந்தந்த இடங்களில் இன்னும் விரிவாகப் பதிவுசெய்ய வைத்திருந்தால்; இந்நூல் இன்னும் ஆழமான தாக்கத்தையும், மிகுதியான வiவேற்பையும் பெற்றிருக்கும். இந்நூலாசிரியரை மிகஎதார்த்தமாகவும் வெள்ளந்தி குணாம்சம் கொண்டப் பெண்ணாகக் காட்டுவதைத்தான் பதிப்பாளர்களும் விரும்பினார்களோ என்னவோ. சில இடங்களைத்தவிர பெரும்பாலான இடங்களில் செய்திகளின் கோர்வையாக மட்டுமே இந்நூல் அமைந்திருக்கிறது.

(நன்றி: இண்டங்காற்று)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp