இஸ்லாத்தின் தொடக்க காலத்திலேயே நபித்தோழர்கள் தங்களது செல்வத்தை இறைப்பாதையில் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தார்கள். எப்படிச் செலவு செய்தார்கள் என்பதை இறைத்தூதரின் வாழ்வின் மணமிகு ஸீராவிலிருந்து அறிந்துகொள்ளலாம். அது அன்றைய இஸ்லாமியச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அழைப்புப் பணி எனும் ஒரு சக்கரமும், இஸ்லாமியச் சமூகத்தின் எழுச்சி எனும் மறு சக்கரமும் வேகமாகச் சுழல்வதற்கு நபித்தோழர்களின் தன்னலமற்ற தானதர்மமும் முக்கிய காரணியாக அமைந்தது. அப்படித்தான் ஓர் ஒப்பற்ற இஸ்லாமியச் சமூகம் இந்த மண்ணில் கட்டமைக்கப்பட்டது.
வாழ்கால சமூகத்தில் ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் நூல்களில் அதி முக்கியத்துவமும் மிகப் பிரபலமும் வாய்ந்த ஒரு நூல்தான் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய ‘ஃபிக்ஹுஸ் ஸகாத்’ எனும் நூல். அந்த நூலின் குறிப்பிட்ட ஒரு பகுதிதான் “ஜகாதுல் ஃபித்ர்” எனும் இந்நூல்.
ஜகாதுல் ஃபித்ர் என்றால் என்ன, அந்தப் பெயர் ஏன் வந்தது, அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன, ஜகாதுல் ஃபித்ரைப் பணமாகக் கொடுக்காலாமா, எப்போது கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பன போன்ற ஐயங்களுக்கான விளக்கங்கள் மிகத் தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.