ஸகாத் பற்றிய அறிவைக் கொடுப்பதற்கு மிகவும் தாக்கமிக்க வழிமுறைகளில் ஒன்று குத்பாவாகும். எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் புத்தகம் ஊடாக இஸ்லாமிய அறிவைக் கொடுப்பது குறைந்தளவிலேயே சாத்தியமாகிறது. வகுப்புகள், நிகழ்ச்சிகளது நிலையும் இதுவேயாகும். ஆனால் ஜும்ஆ குத்பாவுக்கு ஊரிலுள்ள எல்லாக் குடும்ப அங்கத்தவர்களும் சமூகம் தருவர். இந்த வகையில் இஸ்லாத்தின் போதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் மிக சிறந்த வழி குத்பாவாகும். குத்பா என்ற சாதனம் மிகச் சரியாகம் பயன்படுத்தப்படும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் பாரியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தம் பின்னணியில் ஸகாத் பற்றிய அறிவை சமூகத்திற்குக் கொடுக்க இந்த வழிமுறையைப் பயன்படுத்தலாம் எனக் கருதினோம். அந்த வகையில் ஸகாத் பற்றிய முக்கிய பத்து தலைப்புகளைத் தெரிவு செய்து இந்நூலைத் தயாரித்துள்ளோம். ஆதாரமாக அமையத்தக்க வகையில் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு தேவையான போது இமாம்களதும், இஸ்லாமிய அறிஞர்களது கருத்துக்களையும் குறித்துள்ளோம். சாதாரண மக்களை நோக்கியும், இஸ்லாமிய துறை சாராதோரை நோக்கியும் பேசப்படுவதால் இந்த குத்பாக்களை இயன்றளவு எளிமையாக அமைத்துள்ளோம்.
Be the first to rate this book.