வறுமை ஒழிப்பிற்காக இஸ்லாம் வழங்கியுள்ள ஒரு பொருளாதார செயற்திட்டமே ஸ்காத் ஆகும். அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது வறுமை ஒழிப்பில் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது.
ஸகாத்திற்கான செல்வங்களைக் குறிப்பிட அல்குர்ஆன் பிரயோகித்த அம்லாலிஹிம்! 'அவர்களது செல்வங்கள் எனும் சொற்பிரயோகம் பொதுமைப்படுத்தப்பட்டு விளங்கப்பட வேண்டும். அவ்வாறே (அல் ஆமிலீள அலைஹா 'ஸகாத் நிறுவன ஒழுங்கு என்ற அல்குர்ஆனின் அடுத்த பிரயோகமும் மிகச் சரியாகப் புரியப்பட வேண்டும்.
வறுமை ஒழிப்பு இலங்கை அரசின் தேசிய பொருளாதார வேலைத்திட்டங்களில் ஒன்றாகும். அந்த வகையில் ஸகாத்தின் பிரயோகம் அவ்வேலைத்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என நம்புகிறோம்.
இந்த ஆய்வின் முடிவாக தேசிய அபிவிருத்திக்கு ஸகாத்தின் மூலம் பங்களிப்பை செய்வதற்கான தேசிய ஸகாத் நிறுவனம் ஒன்றை உருவாக்குவது மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் அடுத்த கட்ட நகர்வாகும்.
Be the first to rate this book.