நயவஞ்சகத்தின் சுள்ளிகள் நேசத்தின் ஜுவாலையில் சாம்பலாகின்றன; தோல்வியின் ஆரவாரம் வெற்றியின் பழிவாங்களில் அடக்கப்படுகிறது: சவத்தனம் பொங்கும் புன்னகைகள் கோபத்தின் இடிச்சிரிப்புகளால் முறியடிக்கப்படுகின்றன; மன்னிப்பின் முத்தங்கள் சந்தேகக் கேள்விகளால் பற்றியெறிகின்றன. இவ்வாறு யாவற்றையும் சமன் செய்து விட முனையும் ஆசிரியரின் ஒழுங்கு, சிட்டத்தட்ட அனைத்து கவிதைகளிலும் மேலோங்கி திற்கின்றன.
நிஷா மன்சூர்
அன்பு, நீதி, இறை தேசத்தின்பால் தன் அகவயமும், புறவயமும் ஒன்றித்திருப்பதை விழையவரது ஆன்மகளிற்கொரு மேன்மை மிரு வெளிச்சமுள்ளது. அவ்வெளிச்சத்தின் சிறு கீற்றுகள் பட்டு மிளிர்வதான சொற்களை பங்காளி என்னை அவர்களுடைய பல கவிதைகளில் அவதானிக்க முடிகின்றது.
அனார்.
Be the first to rate this book.