சிதம்பரம் பிள்ளையார் கோயில் தெருவுக்குக் குடி வந்திருந்த அந்தப் புதுக் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, ஓரளவு தெரிந்துகொள்ள ராஜாவுக்கோ, ராஜிக்கோ அதிக நேரம் பிடிக்கவில்லை. பேசுவதில் பிரியமுள்ள மனிதர்கள் - அதுவும் பிறரைப் பற்றிப் பேசுவதில் பிரியமுள்ள மனிதர்களுக்குக் குறைவா என்ன?
ராஜாவுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். சின்ன மளிகைக் கடை முதலாளி வேலாயுத முதலியார் சொன்னார். "நாலாவது வீட்டுக்கு நேத்தி சாயங்காலம் யாரோ குடி வந்து விட்டார்கள் போலிருக்கே!" என்று.
"கேள்விப்பட்டேன். பட்டணத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. மற்றபடி..."
"மற்றபடி என்ன? சாப்பாட்டுக்கு இல்லாதவர்கள். ஆனால், பெண்கள் உடுத்துகிறதையும் அலங்காரம் செய்துகொள்றதையும் பார்த்தால், குபேரன் வீட்டு மக்கள் மாதிரித்தான் தோணுகிறது. பெரியவர்களும் சின்னவர்களுமாக ஏழெட்டுப் பேருக்கு மேல் இருக்கிறார்கள். மூத்த பையனைப் பார்த்தால்..." என்று இழுத்துப் பாதியில் நிறுத்தினார் முதலியார்.
- நூலிலிருந்து....
Be the first to rate this book.