ஒரு சிறந்த நூல் என்பது, படிப்போரிடம் நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தி, நிறைய சிந்திக்க வைத்து, அந்தச் சிந்தனைகள் செயலாக மாறி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதை இந்த ‘எட்டாம் அறிவு’ நூலில் உள்ள கதைகள் செய்கின்றன.
ஊரமைப்புத் துறையில் கண்காணிப்பாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர், இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படைத்தவர். கவிதை நூல்கள், நாவல்கள், சிறார் கதைகள், சிறார் பாடல்கள், கதைகள், ஆன்மிக நூல்கள் எனத் தொடர்ந்து இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. 15க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டயங்களையும் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.