முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டார் சுதாகர் சுப்பிரமணியன். முதல் கதை. 'சந்திரகுளம்' மிகமிக வித்தியாசமான கதை. வாசிக்கத் துவங்கினேன். ஆனால் சட்டென அக்கதை அறிவியல் கதை அல்ல, அறிவுலகம் வியக்கும் மாய எதார்த்த வகைமை சார்ந்த கதை என உணர வைத்து வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.
- எழுத்தாளர் அஜயன் பாலா
கதைகளைப் படிக்கும் போது. சில கதைக்கருக்களைத் திருடிவிடலாமோ என்ற எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அப்படியான கதைக்கருவைத் தேர்ந்தெடுக்கும் போதுதான் எழுத்தாளனாக வெற்றி கிட்டும். அவ்வகையில் சுதாகர் வெற்றி பெற்றிருக்கிறார்.
- எழுத்தாளர் விரா
மனம் சிலிர்க்கும் மெல்லிய உணர்வுகளை கவனமாகப் படம் பிடிக்கும் துல்லியமான ஒளிப்பதிவை இவருடைய கதைகளில் காணலாம். காலக் கண்ணியில் விடுபட்டுப் போன மனிதர்கள் இவருடைய கதை மாந்தர்கள். கடந்து சென்ற காலங்களை நினைவுகளில் கட்டியெடுத்து வந்து எழுத்துக்களாக வார்க்கும் ரசவாதி.
- எழுத்தாளர் தமிழ்மகன்
மடல் பெரிது தாழை, ஆயினும் வாசத்தில் மிஞ்சியது மகிழம், குண்டு மல்லியைவிட முல்லையில் சந்தன மணம் கூடுதல், நண்பர் சுதாகர் தாழையாக நீளாமல் மகிழமாக மணம் வீச வேண்டும். அதற்கு உள்ளத்தைப் புடமேற்ற வேண்டும். மன்னர் காலத்தை வீட்டு அவர் எளிய மக்கள் வாழ்வை. அவர்களின் மொழியில் எழுத வேண்டும். என் அன்பான வாழ்த்துகள்.
- எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
Be the first to rate this book.