எல்லா எழுத்தாளர்களும் வெற்றியளிக்காத செயல் ஒன்றைச் சுயநலத்தோடு, சோம்பேறித்தனத்தில் ஊறியபடி செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் மர்மமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுதுவது அலுப்புத் தட்டக் கூடிய பயங்கரமான போராட்டம். வலி உண்டாகும் நோயை நீண்ட காலம் முதுகில் சுமப்பது போலான இறுக்கமான நிலை. தன்னை இம்சிக்கக்கூடிய கொடிய சாத்தானைப் புரிந்து கொள்ளவோ, எதிர்ப்புச் சொல்லவோ மனம் வராத ஒருவர்தான் புத்தகம் எழுதத் தொடங்குகிறார்.
கவனம் ஈர்க்க விரும்பும் குழுந்தையின் அதே உள்ளுணர்வைச் சாத்தானும் கைக்கொள்கிறது. ஒருவர் தன் சொந்த ஆளுமையைத் தொடர்ச்சியாகச் சிதைக்க முன்வரும்வரை, உருப்படியாக அவரால் எதுவும் எழுத முடியாது. நல்ல உரைநடை ஜன்னல் கண்ணாடி போன்றது.
- ஜார்ஜ் ஆர்வெல்
Be the first to rate this book.