ஒரே வானம்; ஒரே பூமி.. ஒரே சூரியன்.. ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.
திரையில் தோன்றியபோதெல்லாம் அநீதி எதிர்ப்பு, ஏழைகளின் பக்கம், நேர்மையின் வெற்றி - இந்த பிம்பம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது. திரையில் சொன்னதை வாழ்க்கையிலும் கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். எளிமை. கட்டுப்பாடு, ஒழுக்கம் இவை அவரது வாழ்வின் அடையாளங்களாக இருந்தன. இதுவேமக்களின்நம்பிக்கையை உருவாக்கியது. பசியை உணர்ந்ததலைவர்அவர். ஏழை மக்களின் துன்பம் அவரது அரசியலின் மையமாக இருந்தது. சத்துணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் அவரை மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றின.
வாக்குறுதிகளை வார்த்தைகளாக அல்ல, வாழ்க்கை மாற்றங்களாக மாற்றியவர். அரசின் பயன் நேரடியாக மக்களின் இல்லம் சென்றது. பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு "பாதுகாவலர்". "தந்தை போன்ற தலைவர் எனக் கண்டனர். எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு ஆட்சி முறை, ஒரு சமூக நீதி சிந்தனை. ஒரு நம்பிக்கைச் சின்னம்.
Be the first to rate this book.