“அம்மா! நாம் எங்கே செல்கிறோம்?” என்று சிறுவன் தன் தாயிடம் கேட்டான்.
”நாம் பொம்மைகளும் இனிப்பும் இறைச்சிகளும் இருக்கும் ஒரு சந்தைக்குப் போகிறோம்” என்று அவள் கூறினாள். அவ்வாறு கூறும்போது அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பின.
அவர்கள் சந்துகள் வழியாக நடந்து, மாந்தோப்பையும் கிராமத்தின் வீதிகளையும் கடந்து சென்றார்கள். இறுதியாக அவர்கள் டோராவின் காடிக்கு (நிலப்பிரபுவின் கோட்டைக்கு) வந்தார்கள். அவர்கள் தங்களது மகனை முத்தமிட்டுத் தங்கள் கைகளில் இறுதியாக ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டார்கள்.
பிறகு தலைவாசற்பக்கத்திலிருந்த ஒரு சிறு கதவு திறந்தது. டோராவின் குடும்பத்தினரில் ஒருவரின் கைகளில் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டான். அந்தக் கதவு சட்டென மூடப்பட்டது.
தம்பதிகள் அங்கிருந்து திரும்பி நடந்தார்கள். அவர்களின் மகன் எப்போதும் வீடு திரும்பப்போவதில்லை.
Be the first to rate this book.