பெண்ணிய பயிற்சியாளர். பெண்கள் சந்திக்கும் அனைத்து விதமான சவால்களுக்கும் வாழ்க்கைக் கல்வி மூலம் தீர்வு காண முடியும் என்பதே இவர் பயிற்சியின் மையப்பொருள். இவர் எழுதிய 'உன்னை அறிந்தால்' என்கிற வாழ்க்கைக் கல்வி நூலை ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில். 'உணர்வு சூழ் உலகம்' என்கிற உணர்வுசார் நுண்ணறிவுத் தொடர் எழுதியுள்ளார். குமுதம் சிநேகிதி இதழில் 'அக்னிக் குஞ்சுகள்' என்கிற தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கு வழிகாட்டும் தொடர் எழுதிவருகிறார்.
சின்னஞ்சிறு குழந்தைகளின் உலகம் கேள்விகளால் ஆனது. 'இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?', 'ஏன் இப்படிச் செய்யக்கூடாது?' என அவர்கள் கேட்கும் கேள்விகளே படைப்பாற்றலுக்குக் காரணமாக அமையும். ஆனால், அப்படிக் கேள்வி கேட்கும் குழந்தைகளை நம் பண்பாடும் கல்விமுறையும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்திவிட்டதுதான் சோகம் குழந்தைகளைக் கேள்வி கேட்க ஊக்குவிப்பதும்,ஏன் கேள்வி கேட்க வேண்டும் என அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதும்தான் இந்தப் புத்தகம் உருவாகக் காரணம்.
Be the first to rate this book.