கவிஞர் நிஷாந்தினியின் கவிதைகள் தனித்துவமானவை. தனித்த மொழிதல் தன்மையுடையவை. பெரும்பாலும் பெண்ணின் அகவாழ்வை, அகத்தின் குரலைப் பேசுபவை. இந்த நவீன வாழ்வில் அகத்தைப் பேசுவதும் பேணுவதும் அத்தியாவசியமாக இருக்கிறது. அகத்தில் வழியே புறத்தை அடைவது அல்லது அகத்தைப் பேணுவதன் மூலமாகப் புறத்தைக் காப்பது மிகுந்த பாதுகாப்பான வழிமுறையாக இருக்கக் கூடும்.
நிஷாந்தினியின் கவிதைகள் இன்மையை, இழப்பை, தவிப்பை, நம்பிக்கைகளை, துரோகங்களை என அகத்தின் அத்துணை கூறுகளையும் கலைக்கண்களோடு பார்க்கின்றன. கலைக்கண்கள் வெறுமனே கண்ணீர் சிந்திக் கரைந்துருகிவிட்டு மீண்டுவிடுவன அல்ல. அவை துயரத்தின் மீதும் சரி, மகிழ்ச்சியின் மீதும் சரி ஆழப் பதிகின்றன. இரண்டையும் ஒரே மாதிரி அழகுடன் பார்க்கின்றன. அந்தப் பார்வையே கலையாகின்றது; கவிதையாகின்றது.
-இரா.பூபாலன்
Be the first to rate this book.