குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த உரையாடலை விரிவாக எடுத்துச்செல்வதற்கான ஒரு புத்தகம். டெல்லியில் உள்ள சங்கத் மற்றும் ஜகோரி அமைப்பு பல வருடங்களுக்கு முன் வெளியிட்ட இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பெண்ணியலாளர், கல்வியாளர், எழுத்தாளர், கல்வி, பெண்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர். தமிழகத்தில் கல்வி சார்ந்த உரையாடல்களை முன்னெடுப்பவர் பாடநூல் குழு, இளந்தளிர் இலக்கியத் திட்டம், சிறார் வாசிப்பு முயற்சிகள் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். புற்றிலிருந்து உயிர்த்தல், வாழ்வியலாகும் கல்வி. அம்மாவின் சேட்டைகள் இவரது முக்கியமான புத்தகங்கள். சிறார் வாசிப்புக்காக 75க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளார். தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, 'கூடு' பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பூலே பெண்கள் பயணக்குழு, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கூழாங்கல் குழந்தைகள் நூலகம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.