யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் திரிகிறது இந்த யானைக்காடு.
ஒரு சமயத்தின் கோட்பாடுகளாக இல்லாமல் ஒட்டுமொத்த மானுட பரப்பிற்கும் தேவையான அன்பை அந்த அன்பை செயல்படுத்தும் அறிவை அந்த அறிவை இழந்த நிலையை அதை அடையும் மனித எதார்த்தத்தை யானைக்காடு தனக்குள் விளைத்திருக்கிறது
ஒரு காட்டிற்குள் இருக்கும் யானை எப்படி சுதந்திரமாக இருக்குமோ அதைப்போல கவலைகள் அற்ற மனித மனத்தை உங்களுக்கு வலியுறுத்தும் ஒரு புதுமை வாழ்வியலை இந்த நூல் உங்களுக்குள் விதைக்க நினைக்கிறது.
யானைக்காட்டில் யானையும் நீங்கள், காடும் நீங்கள்.
Be the first to rate this book.