ஒரு புல்லில் அமர்கிற தட்டான் பூச்சி போல் இலேசானதாக இருக்க வேண்டும் காதலும் காமமும். தட்டான் பூச்சியின் ஸ்பரிசத்தில் புல்லரித்துப் போகிறது புல். புல்லின் மென்மையிலும், இரவெல்லாம் அது தேக்கி வைத்த பரிசுத்தமான பனித்துளியிலும் தட்டானும் மெய் மறந்து அசையாமல் அமர்ந்திருக்கிறது. அன்பு அப்படித்தான் இசையும். கசியும். உருகும்.
உண்மையில் அங்கே ஒரு தியானம் நிகழ்கிறது. பிரபஞ்ச தியானம். அண்டவெளியின் மையத்தையும் விளிம்பையும் இணைக்கும் அற்புத தியானம். ஓஷோ கூறுவது போல் காமத்தில் இருந்து கடவுளுக்குச் செல்லும் பயணத்தின் நுழைவாயில்.
பிரியா பாஸ்கரனின் இந்தக் கவிதை நூலில் நான் வாசித்த பல கவிதைகளில் இந்த அன்பும் நேசமும் புல்லும் தட்டான்பூச்சியும் போல இசைந்துகொடுத்துச் சொல் வடிவம் பெற்றிருக்கின்றன. இக்கவிதைகள் ஒருவித தியான அமைதியில் திளைத்திருக்கின்றன.
--இயக்குநர். பிருந்தா சாரதி.
Be the first to rate this book.