இந்தநூல் முழுவதும் இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சமூகம் என்று பல்வேறு தளங்களில் நின்று, நூலாசிரியர் தனது பட்டறிவையும் படிப்பறிவையும்கலந்து கொடுத்திருக்கும் இந்தக் கட்டுரைகள் படிப்பவருக்குச் சுவையைத் தரும்; பயனுள்ளதாகவும் விளங்கும். பல்வேறு சமூகப் பிரச்னைகளை அலசி, அவற்றை எவ்வாறு அணுகுவது என்று ஒவ்வொரு கட்டுரையும் விளக்குவதால், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ளதாகஇருக்கும் என்பது என் எண்ணம். மொத்தத்தில்இந்த நூல், அறுசுவை விருந்துபோல, படிப்பவருக்கு ஒரு பல்சுவை விருந்து!
- சி.ராஜேந்திரன், IRS
இந்நூலில்இரா.கதிரவனின் சிந்தனைகள் இருவகையாகப் பதிவாகி இருக்கின்றன. இலக்கியங்கள் ஒரு பகுதியாகவும், சமூகச்சிந்தனைகள்மறுபகுதியாகவும் நமக்குக் கிடைக்கின்றன.முதல் பகுதியில் ‘பறம்புமலை தந்த வள்ளல் பாரி’ என்பதிலிருந்து ‘சங்கத் தமிழ்ப் பாட்டும், லியோ டால்ஸ்டாயும்’ என்பது வரையில் பதினைந்து கட்டுரைகள் இலக்கியங்களின் உள்ளுறை உவமைகளையும், இறைச்சியையும், பிறிது மொழிதலையும், வஞ்சப்புகழ்ச்சியையும் நமக்குக் கொண்டுவந்து மிகச் சுவையாகச் சேர்க்கின்றன.
- கவிஞர்தமிழ்இயலன்
Be the first to rate this book.