போராட்டம் ஆர்ப்பாட்டங்களுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுகின்றனர். உணர்வுப்பூர்வமான உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. உணர்வு மேலெழும்பும் முழக்கங்களும் எழுப்பப்படு கின்றன. ஆனால் வக்ஃப் என்றால் என்ன? வாரியத்தின் பணிகள் என்ன? இத் திருத்தச் சட்டத்தின் அபாயங்கள் என்ன? வக்ஃப் சட்டத்தைத் திருத்தவே கூடாதா? நாடாளுமன்றம் கூடி எடுத்த முடிவை நீதிமன்றம் நீக்கிவிட முயல்வது நியாயமா? என்பதைக் குறித்தும் விளக்க வேண்டும்.
நேற்று பாபர் மஸ்ஜித், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற தாக்குதல்கள். இன்று வக்ஃப் பிரச்னை. நாளை பொது சிவில் சட்டம் போன்று வேறு எதுவும் வரலாம். எல்லாச் சூழலிலும் நாம் நிராசையோ, சோர்வோ அடையாமல் தொடர்ந்து போராட வேண்டும். “சத்தியம் சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆனால் ஒருகாலமும் தோற்றுப் போவதில்லை.”
Be the first to rate this book.