வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது.
வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன்.
வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.