இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உலக அரசியலில் ஒரு நிலையான சக்தியாகத் திகழும் விளாடிமிர் புடின் - அவரின் வாழ்க்கை, வெறும் அரசியல் உயர்வின் கதை அல்ல; அது அதிகாரம் எவ்வாறு உருவாகிறது, நிலைக்கிறது, மாற்றமடைகிறது என்பதற்கான ஒரு ஆய்வு. லெனின்கிராட் நகரின் எளிய ஆரம்பத்திலிருந்து கே.ஜி.பி அதிகாரியாக உருவான அனுபவம், அதன் பின் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிந்தைய அரசியல் குழப்பத்தில் உயர்ந்த பயணம், மற்றும் நீண்டகால ஆட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட அதிகாரக் கட்டமைப்பு - இவை அனைத்தையும் இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, தகவல் போர், மற்றும் உலக சக்தி சமநிலை ஆகிய துறைகளில் விளாடிமிர் புடின் உடைய ஆட்சியின் தாக்கத்தை ஆய்வு செய்யும் ஒரு விரிவான ஆராய்ச்சி முயற்சி. புத்தகத்தின் இறுதி அத்தியாயமாக விளாடிமிர் புடின் எழுதிய கட்டுரையான "ரஷ்யர்களுக்கும் உக்ரேனியர்களுக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை குறித்து" அமைந்து இருப்பது மிக சிறப்பு.
Be the first to rate this book.