சிறார் எழுத்தாளர் விழியன் எழுதியிருக்கும் 'மாடரிகா' எனும் இந்நூலில் பத்து மழலைக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் மழலைகளுக்கு இயற்கை குறித்த அக்கறையையும், வாசிப்பின் அற்புதத்தையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் மறைமுகமாக விதைத்துச் செல்கின்றன.
வாசிப்பைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எப்படி? குழந்தைகளோடு அமர்ந்து அவர்களை ஈர்க்கும் கதைகளைச் சொல்ல வேண்டும்.
வாசித்த கதைகள் குறித்து குழந்தைகளோடு உரையாட வேண்டும்.
அதற்கான வாய்ப்புகளை இந்த நூலில் உள்ள கதைகள் ஏற்படுத்தித் தரும் என்றால் அது மிகையில்லை.
-இவள் பாரதி
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.