ஆண்டாண்டு காலமாய் பெண் உடல் மீதும் மனம் மீம் நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி பேசி கொண்டேயிருக்கிறோம், ஆனாலும் அது தீர்ந்தபாடில்லை. ஓய்ந்தபாடில்லை. இனி வரும் நாட்களிலாவது பெண் குழந்தைகள் நன்றாக நடத்தப்படவேண்டும். நடத்தப்படுவார்களென்ற நம்பிக்கை துளிர்வீடுவதையும் இந்த சமயத்தில் தவிர்க்கமுடியவில்லை. ஏனென்றால் பெண் தன்னை உணர ஆரம்பித்து விட்டாள் தன் பலம் மறந்த யானையாய் அவள் யாரிடமும் யாசுகம் கேட்பதில்லை ஒதுகள் நிற்பதில்லை, தன்னை முன்னிலைப்படுத்த ஆரம்பித்து விட்டாள். அவள் வென்றே தீருவாள்.
குலசேகரின் இந்தப் பணி வெறும் படங்களை அறிமுகப் படுத்துவதோ, அதைப்பற்றி விவாதிப்பதோ அல்ல அதன் வழி அவர்தன் நிலைப்பாட்டினையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வித்துகளின் களா வெறும் கனவாக இல்லாமல் நம் வாழ்நாளிலேயே சிற்றோடையாய் மாறி பெரும் ஆற்று வெள்ளமாய் ஆர்ப்பரித்து வரும் வழியெங்கும் தடைகளைத் தாண்டி பெருக்கெடுத்து ஓட வாழ்த்துகிறேன்.
-கே.வி ஷைல்ஜர்
Be the first to rate this book.