கவிராயர் தன் கதைகளை பாந்தமான சொற்களில், அற்புதமான வரிகளில் அழகான ஒரு சட்டகத்திற்குள் பொருத்திவிடுகிறார். வாதாமரத்தின் குழந்தையான அணில், தாயின் மடியில் ஏறி விளையாடும் குழந்தையென அந்த மரத்தில் தாவிக் குதிப்பது போல் கதைகளுக்குள் நுழையும் நம் நினைவுகளும் முன்னும் பின்னுமாக நினைவுகளெனும் ஊஞ்சலில் ஆடுகின்றன. பல இடங்களில், பாத்திரங்களில் நிகழ்வுகளில் நம்மை நாம் பார்க்க முடிகிறது.
-எழுத்தாளர் அக்களூர் இரவி
Be the first to rate this book.