பூம்புகார், மங்கலதேவி கண்ணகி கோயில் போன்றவற்றின் கண்டுபிடிப்பாளர் தொல்லியல் அறிஞர் சி.கோவிந்தராசனார். வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர்.
முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிய சோழர்குல முதல்வன் விஜயாலயன் நிர்மாணித்த நிசும்பசூதனியை கண்டுபிடித்த முதல் கட்டுரையில் விரிவாகச் சொல்கிறார்.
தஞ்சை நகரின் மாமதில் சுவர்கள், அகழிகள், அவற்றில் தான் கண்டுபிடித்த சுல்வெட்டுச் செய்திகளை ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளார். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள நாகத்தீ (வு) சேவப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில் நடந்த அணைக்கட்டு விவரங்களை ஒரு கட்டுரையில் விளக்குகிறார். கலகம் செய்த அதிகாரிகளை தண்டித்த விக்கிரம சோழ விண்ணகர அறங்கூறு அவையம். திருவாரூர் அருகிலுள்ள கண்கொடுத்த வணிதம் கிராமத்திலுள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு கன்யாதானம் செய்யும் போது வரதட்சணை கேட்கக் கூடாது என்ற விஜயநகர் அரசர் தேவராயரின் கல்வெட்டு (கிபி 1422-1446) குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்று.
பூதலூர், செந்தலை. கொல்லிமலை, குற்றாலம், தென்காசி பகுதியில் தான் கண்டுபிடித்த முதுமக்கள் தாழிகள், கிராமக் கோயில்கள் அவற்றில் எழுதியுள்ள செய்திகளை விளக்கியுள்ளார்.
பேரா.சி.கோவிந்தராசனார், தான் எழுதியுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று நேரடியாக சரித்திரச் செய்திகளை ஆராய்ந்து, வெளியிட்டுள்ளது வரலாற்றிற்கு கொடை.
Be the first to rate this book.