அறுசீர் விருத்தம் இலக்கணச் சுத்தமாக இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக அறுசீர் எழுதுவது. எண்சீர் விருத்தம் எழுதுவதைவிடக் கொஞ்சம் கடினமே. ஆனால், தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் இப்பாவகையை மிக எளிதாகவும் திறனாகவும் கையாண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தும் வியந்தும் இவருக்கு 'அறுசீர் அரசன்' என்ற பட்டங்கொடுத்து என் மனம் மகிழ்கிறது. பல கவி நலன்களை வெளிப் படுத்தும் இப்படைப்பு. இவரது கவிதைப் பணியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
முதல்வர் தளபதி ஸ்டாலின் சார்ந்திருக்கும் திமுக தொண்டர்களுக்கு. இது பெரிதும் போற்றத்தக்க நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை. அதையும் கடந்து, எந்தக் கட்சி யைச் சார்ந்த ஓர் இலக்கி யவாதியும் விருப்பு வெறுப்பின்றிப் படித்தால், இக்கவிதை நூல் ஒரு மயிலிறகின் வருடல் போல் உள்ளமையை நிச்சயம் சுவைப்பார்கள்.
-பாசுரப் பாவலர்.
வேணு குணசேகரன்
Be the first to rate this book.