இந்திய ஆக்கிரமிப்புக் காலகட்ட அவலங்களையும், சிறீலங்கா இராணுவக் கொடூரத்தையும் சித்திரிக்கும் உண்மைக் கதைகள் தொகுதி ஒன்றை' அம்மாளைக் கும்பிடுறானுகள்...! என்ற பெயரில், ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். வில்லுக்குளத்துப் பறவை என்ற பெயரிலான உண்மைக் கதைகள்-தொகுதி இரண்டை,' தற்போது உங்கள் கரங்களில் சேர்ப்பிக்கிறோம்.
இந்திய ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் உண்மை நிகழ்வுகளே கதைவடிவில் - உணர்வு பூர்வமாக இங்கு பதிவு பெற்றுள்ளன. “அமைதிப் படை” ஓநாய்களின் வேட்டைக்குப் பலியான அப்பாவி மக்களின் கதைகள் போராட்டத்தை நெஞ்சார நேசித்துச் செயற் பட்டதில் தம்மைப் பலியாக்கிய மக்களின் கதைகள் போராளிகளை நேசித்து, அவர்களைக் காப்பாற்றத் துணிவுடனும் சாதுரியத்துடனும் செயற்பட்ட மக்களின் கதைகள் எல்லாமே, நாம் வாழ்ந்த காலத்தின் உண்மைகளை நெஞ்சிற் பதியுமாறு நெருக்கமாய்ச் சொல்கின்றன.
Be the first to rate this book.