கிராமப்புறத்துப் பண்ணையிலிருந்து மனிதர்கள் தூக்கி எறியப்பட்டு, விலங்குகள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் போது, பண்ணையைச் சமத்துவத்தின் அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும் என்ற அவற்றின் பொற்காலக்கனவு விலங்குகளின் கண்முன்னே நொறுங்க ஆரம்பிக்கிறது. நெப்போலியன் மற்றும் ஸ்னோபால் என்ற இரண்டு பன்றிகளின் தலைமையில் நிகழும் விலங்குகளின் கலகம், நினைத்துப் பார்க்கமுடியாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் ஊழல்களில் போய் முடிகிறது.
சர்வாதிக்காரத்தைப்பற்றியும், ஊழல் மலிந்த அதிகாரப் போதையைப் பற்றியுமான அதிரடி நீதிக்கதை இது. விலங்குப் பண்ணை ஓர் உருவக குறுநாவல்; முதன்முதலில் பிரசுரிக்கப்பட்டபோது, பதிப்பக உலகத்தையே அது புரட்டிப்போட்டது; இன்னும் அந்த ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொஞ்சமும் குறையவில்லை என்பதுதான் அதன் நிலையான சுவாரஸ்யம். ஃபாஸிசத்தைப் கிண்டல் செய்யும் முழுமையான நையாண்டியான விலங்குப் பண்ணை இன்றைய உலகத்திற்கும் பொருத்தமானது. கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு!
Be the first to rate this book.