இன்று கணினி, இணையம், செல்போன், 4ஜி, 5ஜி, சமூக ஊடகங்கள் என தொழில்நுட்பம் உச்சத்தைத் தொடும் காலத்திலும், ஊடகங்கள் உண்மையைச் சொல்கின்றன என்கிற நம்பிக்கை மக்களிடையே நிலைத்திருக்கிறது. அதனால்தான், பொய்ச் செய்திகள், திரித்த தகவல்கள், தவறான மீம்கள் போன்றவை தினமும் கோடிக்கணக்கில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மை என்ன? ஊடகங்கள் எப்போதும் அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே இயங்கி வருகின்றன என்கிற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, ஊடகங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஊடகங்களை மக்களுக்கானவையாக மாற்றும் இலக்கை நோக்கி நாம் நமது சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதாக நான் புரிந்துகொள்கிறேன். இந்நூலைப் படிப்பவர்களுக்கும் அக்கருத்து ஏற்புடையதாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
Be the first to rate this book.