ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 10-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2022 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் ‘விகடன் இயர் புக்’ பொது அறிவுத் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொது அறிவு ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களின் கருத்தாகும். அந்த வரிசையில், இந்த ஆண்டும் அறிவை மெருகேற்றும் தகவல்களின் தொகுப்பாக விகடன் இயர்புக்-2022 தயாரிக்கப்பட்டுள்ளது. சவுதி - ஏமன் நெருக்கடி, இஸ்ரேல்-காஸா நாடுகள் பிரச்னை, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், ஆஸ்கர் விருதுகள் விவரம், உலகம், இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், இந்தியா பட்ஜெட்-2021, இந்திய-தமிழக முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்... என அரிய செய்திகளின் தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது. மேலும், நோபல் பரிசுகள்-2021 பற்றிய சிறப்புக் கட்டுரைகள், இந்திய அரசு வழங்கும் அனைத்துத் துறை விருதுகள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, யூ.பி.எஸ்.சி தேர்வு வினா-விடை, குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களின் அனுபவப் பகிர்வு... இப்படி போட்டித் தேர்வர்களுக்குத் துணைபுரியும் அனைத்துத் தகவல்களும் கொண்ட அற்புதப் படைப்பாக விகடன் இயர்புக்-2022 அமைந்துள்ளது. இது உங்கள் அறிவுத் தேடலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். படித்தறிந்து உங்கள் அறிவுப் பார்வையை விசாலமாக்குங்கள். இயர் புக் பற்றிய உங்கள் கருத்துகளை ‘books@vikatan.com’ என்ற மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Be the first to rate this book.