தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச் சந்திரன் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த வழிவகைகளில், எப்படியான சிக்கலான சூழ்நிலைகளில், எத்தகைய எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கைகொடுத்து உதவினார் என்ற வியப்பூட்டும் வரலாற்று நிகழ்வுகளை இத் தொகுதியிலுள்ள கட்டுரை ஒன்றில் தமது சொந்த அனுபவம் வாயிலாக சுவைபடச் சொல்கிறார் திரு அன்ரன் பாலசிங்கம்.
1987 ஜூலையில், புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது, முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ரஜீவ் காந்தி அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதுவரையும் வெளிவராத தகவல்களைக் கொண்ட இந்த இரகசிய உடன்பாடு பற்றிய விபரங்களை இன்னொரு கட்டுரையில் விபரிக்கிறார் திரு. பாலசிங்கம்.
திரு. அன்ரன் பாலசிங்கத்தின் இக்கட்டுரைத் தொகுதியில், மனித வாழ்வு பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலை பற்றியும் புதுமையான, புரட்சிகரமான சிந்தனைகள் அறிமுகம் செய்யப்படுகிறது. ஓட்டு மொத்தத்தில் முழு மனித விடுதலை பற்றிய ஒரு ஆழமான தரிசனத்தை இந்த எழுத்துக்களில் நாம் சந்திக்க முடிகிறது. இது அனைவரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய ஒரு சிறந்த படைப்பு.
- பதிப்பாளர்
Be the first to rate this book.