'பொதிகை 76' பொதியவெற்பன்
பவளவிழா நிறைவுச் சிறப்பு வெளியீடு
'தேசியவாதம் (Nationalism), இனக்குழுமவாதம் (Racism), இனக்குழுவாதம் (Castism) இவை விதந்தோதி இனங்காணப்பட வேண்டியன ஆகும். சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தின் பெயரால், சர்வாதிகார அடிப்படையிலான இனக்குழும வாதம் இயங்குவதை விளங்கிக் கொண்டாலன்றி உண்மைகள் புலப்படா தமிழ்ச்சூழலில் தேசியவாதத்தின் பெயரால் இனக்குழுமவாதமும், மதவாதமும் மறைமுகமாக சாதியவாதமும் கைகோத்துக் கிடப்பதே அபாயக் கூறாகும் வே.மு.பொதியவெற்பன்.
'திராவிடம் என்பது தமிழ்தான் என்பதை ஆதாரபூர்வமாகப் பேசியுள்ளார். இதுபோன்று நூறு பூக்கள் பூக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது. தமிழுக்கு எதிராகத் திராவிடத்தை நிறுத்துவது என்பதே, 'பாஜக'விற்கான செயல்திட்டமாக உள்ளது. இதனை எதிர்ப்பதற்கான கருத்தாயுதம் இக்காலத்திற்குத் தேவையானது. அதற்கான கருத்தாயுதமாகத் தோழர் வே.மு.பொதியவெற்பன் இக்குறுநூலை உருவாக்கியுள்ளார்'
-ஏ.சண்முகானந்தம்.
Be the first to rate this book.