முனைவர் க.சிவராஜ் தற்போது ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 8 ஆண்டு கால அனுபவம் பெற்ற இவர், பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். தினத்தந்தி நாளேட்டிலும், சிட்டிசன்டாக் வார இதழிலும், பிரான்சு தமிழ் நெஞ்சம் மாத இதழிலும் தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற துறைகளில் மாணவர் பருவத்தில் சிறந்து விளங்கியவர். தற்போது ஆகநல் சமுதாய வானொலியில் வாழ்ந்திட சொல்கிறேன் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார். ஈழத்தில் வெளியாகும் உதயம் வார இதழில் திருக்குறளுக்குத் தன்னம்பிக்கை அடிப்படையில் வாழ்வியல் உதாரணங்களோடு விளக்கவுரை எழுதி வருகிறார். குறள் ஆர்வலர் மற்றும் உலக மகா சாதனையாளர் விருது பெற்றவர். நம்பிக்கை போதிமரம் என்னும் நூலைத் தொடர்ந்து வெற்றிக்கு வயதில்லை இவருடைய இரண்டாவது நூலாகும்.
Be the first to rate this book.