வெற்றித் திருநகரத்துத் தேசிய எழுச்சியின் ஒளிச் சுடரை ஏந்திக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவன் அவன் துங்கபத்திரா நதிக்கரையில் தெலுங்கனாகப் பிறத்தவன் வைகை நதிக் கரையில் குடியேறித் தமிழ் நாட்டுக்காகப் பாண்டியனாக வாழ்ந்தவன தேசியத் திருமகனாகத் திகழ்ந்த விசுவநாத நாயக்கன் அவன்.
கல்லில் வடிக்கப் பட்ட அவன் உருவைக் காண விரும்புகிறவர்கள் இன்றும் அவனை மதுரையில் மீனாட்சி அம்மையின் ஆலயத்தில் சந்திக்கலாம் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டி அதன் தூண ஒன்றில் பணிவோடு நின்று தன் இரு கரங்களையும் கூப்பி நிற்கிறான அவன் திருச்சிராப்பள்ளியில் உள்ளவர்களுக்கு அவன் அகழ்ந்து வாய்த்த தெப்பக்குளதைக் காணும்போது அவனுடைய நினைவு வரும் அவன் தன் மோன மொழிகளில் என்னிடம் கூறிய கதையை அவனைப் போலவே என் இரு கரங்களையும் கூப்பி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் படித்துப் பாருங்கள் .
- அகிலன்
Be the first to rate this book.