உலக இலக்கியம் என்றாலே அடர்த்தியான, கடினமான. தத்துவார்த்தமான கதைகள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அங்குலம் அங்குலமாக நகர்த்த வேண்டிய கதைகள் மட்டுமல்ல; பந்தயக் குதிரைபோல் சிறிப் பாயும் கதைகளும் இலக்கியம்தான்.
திடுக் திருப்பத்துக்குப் புகழ்பெற்ற ஓ.ஹென்றி, சிறுகதை அரசர் ஆண்டன் செக்காள், அமானுஷ்யக் கதைகளுக்காகக் கொண்டாடப்படும் எட்கர் ஆலன் போ, பெண்ணிய இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கேத் சோப்பின், ஷெர்லாக் ஹோம்ஸ் புகழ் ஆர்த்தர் கானன் டாயில், எழுத்தாளர்களின் ஆதர்சம் மாப்பஸான் என்று தொடங்கி சுவையான, விறுவிறுப்பான பல எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டிருக்கும் மாறுபட்ட தொகுப்பு இது.
தேர்ந்தெடுத்த விதத்தில் மட்டுமல்ல. மொழியாக்கத்திலும் வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார் ஜவர்லால். இறுக்கமான நடையில் அல்லாமல் புத்துணர்ச்சியூட்டும் புதிய, சமகாலத் தமிழில் இக்கதைகளை அவர் மொழி மாற்றியிருக்கிறார்.உலக இலக்கியத்தின்மீது நீங்கள் காதல் வயப்பட உதவும் ஒரு கருவி என்று நிச்சயமாக இந்நூலை அழைக்கமுடியும்.
Be the first to rate this book.