ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள்
ஓங்கி ஒலிக்கின்றன.
எங்களின் நாட்கள்
எங்களுக்கானவை பறிக்கப்பட்டவைகளும்
மறுக்கப்பட்டவைகளும்
மீளவும் கைசேரல் பறவை
பறக்க விளைதலும் மழலை
தவழ முயல்தலும் பெண்மை
பேச எழுதலும்
இயல்பென்று அறிக.
பூமிப்பந்தின் புதிய
நியதியும் அதுவே.
காலத்தின் கட்டாயம்.
விதிக்கப்பட்ட அன்றேல்
சபிக்கப்பட்ட காலங்கள்
கடந்து காலெடுத்து நடக்கிறது காற்று.
இனி...
வெட்டப்பட்ட போதும்
வேர்கள் துளிர்விடத் தொடங்கும்.
வெந்நீர் ஊற்றப்பட்ட போதும்
தளைத்தது ஒங்கும்.
-தமிழவள்
Be the first to rate this book.