நூலாசிரியர் ரமாதேவியின் ஒவ்வொரு வார்த்தையும் நம் மனத்துக்குள் புகுந்து நாட்டியம் ஆடுகிறது. அதன் வீரியத்தை வார்த்தைகளாய் வெளிப்படுத்தவே நாம் நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். இவரின் இந்த ஒரு நூலை நான் இரண்டு நாட்களாய் ஆழ்ந்து படித்தேன் என்பது எனக்கான சுயநலம். அத்தனை விஷயங்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. படித்து முடித்ததும் நமக்குள் ஒரு வேகமும் உந்துதலும் ஏதாவது நாமும் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என்கிற எண்ணமும் நிச்சயம் தலை தூக்கும்.
-ம. வான்மதி
ஆசிரியர் பாவையர் மலர்
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.
Be the first to rate this book.