பிசிறு தட்டாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை நெடுகிலும் வகைவகையான மனிதர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். எங்கேயும் நிகழ்வதற்குச் சாத்தியமாயுள்ள பின்புலம்போலத் தோன்றினாலும் மீனாசுந்தர் தனக்குரிய நிலத்தில் நின்று மண்கவுச்சியுடன் வண்டல் மொழியில் களமாடியிருக்கிறார். வெப்புளின் சூட்டைச் சுமந்தலையும் கீழத்தஞ்சையின் இன்னொரு பரிதவிக்கும் முகம் இங்கே எழுத்தாக மலர்ந்திருக்கிறது. மழை ஈரத்துடன் ஒடிந்த கிளையொன்றில் சிறகுகளற்று அமர்ந்திருக்கும் மானுடப் பறவையொன்றின் ஏக்கமும் கொந்தளிப்புமே வெப்புள். எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் பாடுகளை மேலும் மேலும் மீனாசுந்தர் எழுதிக் குவிக்கட்டும்.
-கு. மகுடீஸ்வரன்
Be the first to rate this book.