கண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது. இளமைக்கும் வயதுக்குமான இறுக்கமான பிணைப்பை தளர்த்திவிடுகிறது. கண்மணியின் பெண்கள் ஆச்சரியப்படும் மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ளத் தவிப்பவர்கள். அதை இழப்பதைப் பிடிவாதமாக அஞ்சுகிறவர்கள். அவர்களுக்கு இளமை புதிய சவால்களை எதிர்கொள்ள ஆயுதமாக வேண்டியிருக்கிறது. 'வீனஸ்' அவர்களுக்கு வெறும் அழகு நிலையமல்ல, அது ஒரு போர்ப்பயிற்சிப் பட்டறை! அதன் கண்டிப்பான விதிகளும், அமைவு நேர்த்தியும், தொழில்நுட்பமும் மிகத் தீவிரமான இருத்தலியல் அச்சத்தையும் துயரத்தையும் அடிக்குரலாகக் கொண்டவை. இந்தத் தீவிரம் 'வீனஸ்'ல் பிரமாதமாக, கையெழுத்திடும் அலட்சியத்துடன் மொழிப்பட்டிருக்கிறது. இளமை என்னும் ஆபத்தான கனவின் அழகியலாக்கத்தில் தன் நிபுணத்துவத்தை கண்மணி தன் இரண்டாவது நாவலிலும், ஒப்பிட முடியாத தனித்துவத்துடன் நிரூபித்திருக்கிறார்.
- பா. வெங்கடேசன்
Be the first to rate this book.