“என் கதையா?” என்று மிரண்ட குரலில் கேட்டேன். “யார் சொன்னது, எனக்கு ஒரு கதை உண்டென்று? எந்தக் கதையும் இல்லை எனக்கு...” என்றேன். “கதை ஏதும் இல்லாமல், எப்படி நீ வாழ்ந்தாயாம்?” என்று சிரித்தவாறு என்னை அவள் இடைமறித்தாள். “கதை இல்லாமலேதான் நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்! தன்னந்தனியனாய் வாழ்ந்து வந்துள்ளவன், அவ்வளவுதான்.தனியனாய் இருப்பதென்றால் என்ன தெரியுமா உனக்கு? “அதெப்படி தனியனாய் இருப்பது? யாரையும் நீ பார்ப்பதே இல்லை என்றா சொல்கிறாய்?” “இல்லை, இல்லை! பார்க்கிறேன்தான். இருந்தாலும் நான் தனியன்தான்.” “யாரோடும் பேசுவது இல்லையா?” “சரியானபடி சொல்வதெனில், யாரோடும் பேசுவதில்லை.” “அப்படியானால் நீ எம்மாதிரியான ஆள் என்பதைக் கொஞ்சம் விளங்கும்படி சொல்லேன்!"
Be the first to rate this book.