இந்த மண்ணில் முட்களும் முளைக்கின்றன, பூக்களும் பூக்கின்றன, சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் முட்களாகவும் இருக்கின்றன, பூக்களாகவும் இருக்கின்றன. இந்த முட்கள் பெண்களின் பாதையில் மட்டுமே கொட்டிக் கிடக்கின்றன, ஆண்களின் பாதைகள் பூக்களால் ஆனது, சம்பிரதாயங்கள் எதுவும் தானாக உருக்கொள்ளவில்லை, எதுவும் தானாக மடிவதுமில்லை, மண்ணை நோக்கி மழை நீர் சுத்தமாக வந்து விழுகிறது, மண் சுத்தமாக வைத்திருப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணும் அப்படித்தான் தேவதையாக மண்ணிற்கு வருகிறாள். இந்த மண்ணும், மனிதர்களும் என்ன செய்கிறார்கள்?
Be the first to rate this book.