எழுதஎத்தனிக்கும் போதெல்லாம் ஏனைய சிந்தனைகள் சிந்தையைநனைத்து சென்றாலும், ஆழத்தில் ஊடுருவியுள்ள, பல சிந்தனைகளை கிளறுகையில், புதைந்து கிடக்கும் பல கோபங்களை தான்முதலில் கிண்டி எடுக்கிறது இந்த எழுத்து. அநேகஎழுத்தாளர்களுக்கும் அவ்வாறே இருந்திருக்கும் என்று எனக்கு நானே நம்பிக்கை கொடுத்து, நான் கேட்க நினைத்த பல கேள்விகளை, நான்மறக்க நினைத்த பல நினைவுகளை, நான்உரித்துக் காட்ட நினைத்த பல கண்ணிய வான்களைஇங்கு தோலுரித்துக் காட்டி இருக்கிறேன், இருப்பினும் இப்புத்தகம் முழுவதும் கற்பனையே.
Be the first to rate this book.