வெண்பாவின் டெல்லி அப்பளம் என்ற இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது. சிறார் இலக்கியத்திற்குப் புதிய நல்வரவாக இந்த நூல் அமையும் என்று தோன்றுகிறது. இதில் உள்ள கதைகள் ஒரு புதிய காற்றாய் வீசுகின்றன.
சிறார் இலக்கியத்தில் குழந்தைகளுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்பதில் இருக்கும் தெளிவும் அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் இருக்கும் அழகும் இந்த நூலைத் தனித்துவப் படுத்துகின்றன. குழந்தைகள் வாசிப்பதற்கு எளிமையான நடையும் ஆர்வமூட்டும் கதைப்பின்னலும் கையில் எடுத்தால் கீழே வைத்துவிட முடியாதபடி ஈர்த்துக்கொள்கின்றன.
யதார்த்தமான சம்பவங்கள் வழியாகவும் அதிபுனைவு வழியாகவும் எழுதப்பட்ட இந்தக் கதைகள், குழந்தைகள் மனத்தைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
-எழுத்தாளர் உதய சங்கர்
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். தற்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகளும் பட்டறைகளும் நடத்திவருகிறார்.விஜோஸ்புக்ஸ் பார்ன் (ViJosBooksBarm) என்ற நூலகத்தின் நிறுவனர்.கதை சொல்லியான இவர். சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார்.
Be the first to rate this book.