மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள்.
பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்கிறார். சந்தன வாடை. மெல்லிய வியர்வை நெடி. பக்கத்தில் நிற்கும் பெண்ணின் தலைமுடியிலிருந்து கேசவர்த்தினி வாசனை. யாரோ கிராம்பு மெல்லும் வாடை.
ஏன் சாமி, ராத்திரிக்கு ஆலப்புழையிலே ரூம் எடுத்துடலாமா?
அம்பலத்துள்ளில் சம்சாரம் ஒழிவாக்கணும் தயவாயிட்டு.
மணிகள் முழங்குகின்றன. வரிசையாக ஏற்றி வைத்த நெய் விளக்குகளின் குளிர்ந்த ஒளி.
அம்பல நடை திறக்கிறது.
Be the first to rate this book.