கலாப்ரியா என்ற மனிதருக்கும் கவிஞருக்கும் வேறுபாடில்லை. இவர் என்ன வாழ்கிறாரோ அதையே எழுதுகிறார்.
அடிக்கடி அவளுக்கொரு சிம்மாசனம் செய்வதில் அவர் சலிப்படைவதில்லை.
அவளைப் பற்றின எல்லாக் கவிதைகளும் சிம்மாசனங்களே.தலைப்புக்கள் ரசனை மிக்கவை. பக்குவமான தலைப்புக்கள் சிலநேரங்களில் கவிதைகளை விட அழகாக அமைந்து விடுகின்றன.
சில இடங்களில் விடுகதை சொல்கிறார்.(சலுகை, சாத்தானும்..) அவை கவிதையல்ல. இவைகளிலிருந்து விடுபட்டு தத்துவ பூர்வமாக மாற வேண்டும்.
அப்போது நெல்லை மாவட்டம் தமிழுக்கு இன்னொரு சீதனத்தை வழங்குவதைக் காணலாம்.
-பா.செயப்பிரகாசம்
Be the first to rate this book.