உனக்கு நீதியின் லக்ஷணமே தெரியாதா! நீதிக்கும் நேர்மைக்கும் உனக்கும் நெடு நாள் பகையா? உனக்கு தர்ம தேவதை என்ற பெயர் தகுமா? என் பூஜையை ஏன் ஏற்றுக்கொண்டாய்? ஏற்ற பின் திக்கற்ற என்னை ஏன் தவிக்கச் செய்தாய்? என் உழைப்பை உண்டு கொழுத்தவன் என்னை வஞ்சித்தால், உனக்கு அடிமையாக இருந்து உழைத்ததற்கு பலன்தான் என்ன? என் உைழப்பை உண்டு கொழுத்தாயே உனக்கு கருணை இல்லையா? நெஞ்சிலே ஈரமில்லையா என்று கேட்பேன் அல்லவா? அது போலவே உன்னை கேட்கிறேன். நீ செய்தது நியாயமா? ஏன் பேசாமல் இருக்கிறாய்? எங்கே என் கேள்விக்குப் பதில்? ஏழையை பணக்காரன் அடிக்கும்போது எப்படி ஏழை வாய் திறவாமல் இருக்கிறானோ அப்படித்தான் இருக்கிறாயே நீயும், ஏ. காளி, ஏழையின் மனம் ஓர் எரிமலை! அதிலிருந்து கிளம்பும் ஜுவாலையைப் பார்! ஹ... ஹ... ஹ... ஹ. பார் ஜூவாலையை ! ஹ ஹ...
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.