ஆலைப் பல்சக்கரத்தில் சிக்கிய பல்லியாகத்தான் அன்று தொடங்கி இன்று வரை தொழிலாளர்களின் ஜீவிதம் உள்ளது. ஐடி, ‘கிக்’ என அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் நவதாராளமயம் இந்த பல்லி ஜீவிதத்தை பாரபட்சமில்லாமல் வழங்கி உள்ளது என்பதை வரலாற்று தரவுகளோடு இந்த நூல் எளிமையாகவும், வலிமையாகவும் எடுத்துச் சொல்கிறது.
இங்கிலாந்தின் தொழில் புரட்சி காலத்தில் வேலை என்ற பெயரில் குழந்தைகளை கொலைக்களத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். உடலின் உள்ளேயும் வெளியேயும் கரிபடிந்த “புகைப்போக்கி குழந்தைகளின்” அவல நிலையை இந்த நூலில் படித்தால் கண்ணீரும், கோபமும் கொப்பளிக்கும்.
நூலாசிரியர் அ. பாக்கியம் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரான இவர், பல நூல்களை எழுதியுள்ளார். பேச்சாலும், எழுத்தாலும், களத்தாலும் கட்சிக்கு அப்பாற்பட்டும் பரவலாக அறியப்படுபவர்.
Be the first to rate this book.