வரலாற்று நெடுகிலும், இரு தேசங்களுக்கு இடையிலான சிந்தனை முரண்பாடுகள் எப்போதும் போரில் தான் முடிந்திருக்கின்றன.
நித்தில தேசத்தின் இளவரசியும் மாதீர்த்தனின் மாணவியுமான “வெண்பா”, மாதீர்த்தனின் இலக்கினை தன் இலக்காக்கி கொண்டு நன்னன் தேசம் நோக்கி பயணப்படுகிறாள். இறுதியில், வெண்பாவினால் அந்த இலக்கினை அடைய முடிந்ததா? இல்லையா? அல்லது நன்னன் தேசத்தினால் வெண்பாவிற்கு ஏதும் பெரும் ஆபத்து உருவாகி, அதனால் தேசங்களுக்கிடையே பெரும் போர் உருவாகிவிட்டதா?
இச் சிக்கல்களுக்கிடையில் உருவாகும் நட்பு, அன்பு, கோபம், அதிகார மோதல், பழியுணர்வு மற்றும் மிக முக்கியமாக “மெய்யுணர்வு” என அனைத்து வித உணர்வுகளையும் கொண்டு விளக்கும் வரலாற்று புனைவே “வீழும் தேசம்”.
நாடுகள் அமைத்து வாழும் இக்காலத்திலும், மனிதர்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதை உறுதி செய்வதற்கு ஏன் போராட வேண்டியிருக்கிறது என்பதை பற்றி புரிந்து கொள்ளும் நோக்கிலே இந்த வரலாற்று புதினம் எழுதப்பட்டிருக்கிறது…
Be the first to rate this book.