இந்தியஅரசியலமைப்புச் சட்டம் பிரிவு 20 உட்பிரிவு 3 மற்றும் இந்திய காவல்துறை சட்டம் 1881 பிரிவு 29ம் சித்திரவதையைதடை செய்துள்ளன.காவல்துறைதன் காவலில் உள்ளவர்களை துன்புறுத்துவது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 330 மற்றும் 331 படி தண்டனைக்குரிய குற்றம்.எனவே சித்திரவதை என்பதுஇந்திய சட்டங்களுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது..ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கொள்கையின் 5 ஆவது பிரிவின்படியும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அறிக்கையின் 7 வதுபிரிவின்படியும் எந்த ஒரு தனிமனிதனின் மீதானதுமான சித்திரவதை தடை செய்யப்பட்ட ஒன்றாகும்..
Be the first to rate this book.