பதினெட்டு நாட்கள் நடந்த குருஷேத்திரப் போரில், ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத சிகண்டியின் அம்பினால் வீழ்த்தப்பட்டுப் படுக்கையில் கிடந்த பிதாமகன் பீஷ்மரின் எண்ணவோட்டங்களாக இக்கதை விரிகிறது. மேலோட்டமாகப் பங்காளிகள் ஈண்டைக் கதை என்பது பரவலாகத் தெரிந்ததுதான் என்றாலும், இக்கதையினூடாக அக்காலத்திய நாட்டு நிலவரம், அரசர்களின் போக்கு, அங்கு பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள், சமுதாய அமைப்பு, ஆட்சி செய்தவர்களின் முதன்மை நோக்கம் போன்ற அனைத்தும் அலசப்படுகின்றன. பிதாமகனிலிருந்து, பாண்டவர், கௌரவர், கர்ணன், கண்ணன், பரசுராமன், சால்வன், எனப் பலப்பல ஆண்கள் கதையினூடாக இருந்தாலும், கதையின் முதன்மையிடம் 'அம்பை' என்ற காசி அரசனின் மகளுக்கே உரித்தாகும். அவளே இப்புதினத்தின் தலைவி.
அம்பையை முதன்மையாகக் கொண்டு, இன்றைய அரசியலையும் தேவையான சமூகக் கருத்துகளையும் சொல்ல முடியும் என மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூல் வெற்றிகரமாக பன்னிரண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது..
Be the first to rate this book.